"ஏனெனில் தேவனே தம்முடைய சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
(பிலிப்பியர் 2:13)"

இந்த வசனத்தின்படி இயேசு ஜீவிக்கிறார் சபையில் உள்ள ஒரு சகோதரனுக்கு தொலைக்காட்சி ஒன்று கர்த்தருக்காக ஆரம்பித்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் 2008 ம் ஆண்டில் உண்டானது. இதற்காக அன்றிலிருந்து பல வருடங்களாக அவர் ஜெபித்து வந்தார். அதே விருப்பத்தை இயேசு ஜீவிக்கிறார் சபையில் வேற வேற காலப்பகுதிகளில் வேற வேற சகோதரர்களுக்கும் தேவன் வைத்தார். அவர்களும் அதற்காக ஜெபம் பண்ணி வந்தார்கள்.

எல்லோருமாக ஒருமனப்பட்டு 2014 ம் ஆண்டு உபவாசித்து ஊக்கத்தோடு விண்ணப்பித்தார்கள். தேவனுடைய வார்த்தை இவ்வாறாக சொல்கிறது.

"அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:19)"

என்ற வசனத்தின்படி இந்த தொலைக்காட்சியை ஆரம்பிக்கத் தேவையான ஞானம் மற்றும் இதற்கு தேவையான பணவசதிகள் பொருட்கள் என சகல தேவைகளையும் அதிசய விதமாக 2014ம் ஆண்டில் கர்த்தர் சந்தித்தார்.

எங்கள் ஜனங்கள் தேவனை அறிகின்ற அறிவை அடையவும், சத்தியத்தின் வெளிச்சத்தை காணவும், பாவம், சாபம், வியாதி, கண்ணீர், சமாதானமின்மை என்ற சிறையிருப்பில் இருந்து வெளிவர, தேவனுடைய நாமத்திற்காக, அவர் மகிமைக்காக, கர்த்தர் இதை அற்புத விதமாக உருவாக்கி தந்தார். 01.01.2015 இலிருந்து இத் தொலைக்காட்சி இணைய தொலைக்காட்சியாக ஆரம்பிக்கப்பட்டது.

 "கர்த்தருடைய நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக."